மாவீரர் தினத்தை தடையின்றி அனுஸ்டிக்க இடமளிக்கப்பட வேண்டும்: சுயேட்சை வேட்பாளர் மயூரன்! 

கல்வியில் புதிய புரட்சி ஒன்றை ஏற்ப்படுத்துவதன் மூலமே எமது சமூகத்தின் வளர்ச்சி நிலையினை எட்ட முடியும். அத்துடன் மாவீரர் தினத்தை தடையின்றி அனுஸ்டிக்க இடமளிக்கப்பட வேண்டுமத் என கரும்பலகை சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ம.மயூரதன் தெரிவித்துள்ளதுடன் எதிர்வரும் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க அரசு தடைவிதிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இந்த கட்சிகள் அனைத்துமே பழமையான கோட்பாடுகளையும், பழைய தலைவர்களையும் கொண்டுள்ளது. அவர்கள் சின்னத்தை மாத்திரம் மாற்றி போட்டியிடுக்கின்றனர். ஆனால் தமிழ் மக்கள் புதிய மாற்றத்தை நோக்கி சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நாம் கல்வியின் அடையாளமாக கரும்பலகைச் சின்னத்தில் சுயேட்சை குழுவினூடாக மாற்றத்தை நோக்கி போட்டியிடுகின்றோம்.

கல்வியில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதே எமது முதலாவது நோக்கமாக உள்ளது. இன்று போதைப்பொருள் பாவனை பாடசாலை மட்டத்திற்குள் ஊடுருவும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. எனவே இந்த நிலைமையை மாற்றுவதற்காக எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கல்விக்கான ஒரு மாற்றத்தை முதன்மைபடுத்தியுள்ளோம்.

இன்று பல பாடசாலைகள் பூட்டப்படும் நிலையில் உள்ளது. பாடசாலைகள் பூட்டப்பட்டால் அவற்றை திறப்பது கடினமான விடயம். அதேபோல பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர் உட்சேர்க்கையினை அதிகரிக்கவேண்டும். எனவே நாம் பாராளுமன்றம் சென்றால் இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு வலியுறுத்துவோம்.

சுகாதாரத் துறையில் மாற்றம் ஒன்றை செய்யவேண்டும் இன்று அரசாங்க மருந்தகம்ஒன்று கூட வன்னியில் இல்லை. ஏனைய பகுதிகளில் உள்ளது. அதனை இங்கு கொண்டு வந்தால் ஏழை மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் நிலைஉள்ளது. விவசாயிகளிற்கு உரிய சந்தைவாய்ப்பு இல்லை. நெல்லுக்கு நிலையான விலை இல்லை. விவசாயிகளின் பணம் வீணடிக்கப்படுகின்றது. இவை மாற்றப்படவேண்டும்.

அத்துடன் சிறையில் உள்ள முன்னாள் போராளிகள் அல்லது புலிஉறுப்பினர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியை கேட்டு நிற்கின்றோம். கடந்த காலங்களுக்கு முன்னர் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட கட்சி இன்று ஆட்சியமைத்துள்ளது. எனவே அவர்களுக்கும் அந்த மன்னிப்பு வழங்கப்படவேண்டும். மாவீரர்தினம் தங்குதடையின்றி நடைபெறுவதற்கு வழி ஏற்ப்படுத்தவேண்டும். எனவே பாராளுமன்றுக்கு சென்றால் நாம் இவற்றை நிவர்த்திசெய்வதற்கான நடவடிக்கையை எடுப்போம் என்றார்

Latest news

Related news