சந்தைசுற்றுவட்ட வீதியில் நடைபாதை அமைப்பு.

வவுனியா சந்தைசுற்றுவட்ட வீதியின் முகப்பு பகுதியில் நடைபாதை அமைக்கும் பணி நகரசபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பாதையில் இருபக்கமும் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சுகாதாரமற்ற வகையில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் அந்த பாதையில் வாகனநெரிசலும் ஏற்பட்டிருந்தது.

இதனை கருத்தில்கொண்ட வவுனியா நகரசபை அந்தவீதியின் முகப்புபகுதியில் நடைபாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதேவேளை இன்றையதினம் அங்கு மரக்கறிவிற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகள் பொலிசாரால் அகற்றப்பட்டிருந்தனர்.

Latest news

Related news