மன்னார் நீதிமன்ற வளாகம் முன்பாக சற்றுமுன் துப்பாக்கிச்சூடு : ஆபத்தான நிலையில் மூவர்

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இதன் போது வழக்கு அலுவல் ஒன்றுக்காக நீதிமன்றத்துக்கு வருகை தந்த மூவர் துப்பாக்கிச் சூடுபட்டு படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவர் ஆபத்தான நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் குறித்து மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

Related news