Breaking News 🛑மன்னார் நீதிமன்ற வளாகம் முன்பாக சற்றுமுன் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி Breaking News

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

 

வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியாசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

இதன்போது, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் படுகாயமடைந்த இரு ஆண்கள் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மன்னார் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியின் போது ஏற்பட்ட தர்க்கத்தை தொடர்ந்து ஜூன் மாதம் 10ஆம் திகதி சகோதரர்கள் இருவரை மற்றைய தரப்பினர் படுகொலை செய்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணைக்காக இன்றையதினம் வியாழக்கிழமை வந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நீதிமன்ற முன்றலில் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர், அவர்களை கைது செய்ய பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news

Related news