
இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் கலைசார்ந்த படைப்புக்களை செய்துவரும் தொழில் முயற்சியாளர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வும் , கலைக்கண்காட்சியும் நேற்றையதினம் (02.03.2025) யாழ்ப்பாணம் ஆண்கள் இந்துக்கல்லூரியில் இடம்பெற்றிருந்தது.
டாறா (Tara) நிறுவனத்தினருக்கும் இலங்கையில் இருந்து கலைக்கண்காட்சியில் கலந்துகொண்ட 15 சுயதொழில் செய்பவர்களுக்குமான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

அதனைதொடர்ந்து எமது உள்ளூர் உற்பத்தியாளர்களின் கலைப் பாெருட்களை பார்வையிட்டு,எமது உள்ளூர் உற்பத்தியாளர்களின் தரம், உற்பத்தி பொருட்களின் வெளியீடு (Output) எவ்வாறு இருக்க வேண்டும், சந்தைப்படுத்துவதற்கான. வழிவகைகளையும் கூறி ஜேர்மன் டாறா (Tara ) நிறுவனத்தினர் பர்வையிட்டிருந்தனர்.

யாழ் பல்கலைக்கழக பட்டப்பின் படிப்பின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியரும் புதிய வாழ்வு நிறுவனத்தின் ஆலோசகருமான வேல்நம்பி, புதிய வாழ்வு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான செல்வி துரைச்சாமி திலகவதி, திட்ட இணைப்பாளர் சு.விஜயலாதன், சுயதாெழில் முயற்சியாளர்கள்,புதியவாழ்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
