புதுக்குடியிருப்பில் மாபெரும் பிரதேச விற்பனை சந்தை ஆரம்பித்து வைப்பு (Video )

உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்குடன் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான விற்பனை சந்தை ஒன்று இன்றையதினம் (10.03.2025) புதுக்குடியிருப்பு பிரதேசசபை பஸ்தரிப்பு நிலையத்தில் இடம்பெற்றிருந்தது.

தற்கால பொருளாதார நெருக்கடி காலத்தில் , உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதற்கும், உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடும் சிறுதாெழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவு, மகளீர்விவகார அமைச்சு, தொழிற்துறை திணைக்களம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம், புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஆகியவற்றின் அனுசரணையுடன் மாபெரும் பிரதேச விற்பனைச் சந்தை ஒன்று இன்றையதினம் (09.03.2025) புதுக்குடியிருப்பு பிரதேசசபை பஸ்தரிப்பு நிலையத்தில் காலை 9 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.

குறித்த விற்பனை சந்தையில் புதுக்குடியிருப்பு பிரதேச உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததுடன் மக்கள், சமூகஆர்வலர்கள் உள்ளூர் உற்பத்தியாளர்களின் பாெருட்களை உற்சாகத்துடன் கொள்வனவு செய்திருந்தனர்.

குறித்த பிரதேச உள்ளூர் உற்பத்தி கண்காட்சியில் உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தியை பார்வையிட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் உள்ளூர் உற்பத்தியாளர்களின் தேவைகளை கேட்டறிந்ததுடன், அவர்களுக்கான தேவைகளை நிவர்த்தி செய்வதாகவும் உறுதியளித்திருந்தார். அத்துடன் இவ் உள்ளூர் உற்பத்தி சந்தையானது வாரம் தோறும். ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் இங்கும் நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தார்.

குறித்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ.விஜயகுமார், புதுக்குடியிருப்பு உதவி பிரதேச செயலாளர் கி.டென்சியா, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர் கு.தர்சன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் தொழில் துறை திணைக்களத்தின் உத்தியோகத்தர் பா.லோஜி, பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.விஜயந்தி, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப அலுவலக பொறுப்பதிகாரி ஆ.முரளிதரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பி. தர்ஜினி, புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் நவநீதன், உள்ளூர் உற்பத்தியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தற்போது புதிதாக நியமனம் பெற்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக தற்போது கடமைபுரியும் விஜயகுமாரின் வருகைக்கு பின்னர் இத்தகைய நல்ல மாற்றங்கள் உருவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news