முல்லைத்தீவில் சாதாரண தரப்பரீட்சையில் 3414 மாணவர்கள். 33 நிலையங்கள்.

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்து செய்யப்பட்டு இன்றையதினம் (17.03.2025) பரீட்சை செயற்பாடுகள் ஆரம்பித்திருந்தது.

இம்முறை சாதாரண தரபரீட்சைக்கு முல்லைத்தீவில் 2879 பாடசாலை பரீட்சார்த்திகள், 535 தனியார் பரீட்சார்த்திகளும் தகுதி பெற்றுள்ளதுடன் அவர்களுக்காக 33 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 11 இணைப்பு காரியாலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

குறித்த பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 474,147 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 398,182 பாடசாலை பரீட்சார்த்திகளும் 75,968 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளதாகவும் ,விசேட தேவையுடையோர், கைதிகளுக்கும் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Related news