நாயாறு கடலில் உயிரிழந்த யுவதியின் சடலத்தை நேரில் சென்று பார்வையிட்ட நீதிபதி

நாயாறு கடலில் உயிரிழந்த யுவதியின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் உத்தரவிட்டுள்ளார்.

முல்லைத்தீவு நாயாறு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட யுவதியின் சடலத்தை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் நேரில் சென்று இன்று (31.03.2025) மாலை பார்வையிட்டிருந்தார். அதனையடுத்து சடலத்தை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து சென்று சடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தார்.

உடையார்கட்டு பகுதியில் தையல் கற்கும் யுவதிகளும் ,தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள் கப்ரக வாகனத்தில் நாயாற்று கடற்பகுதிக்கு வந்துள்ளனர். குறித்த பெண்கள் நாயாற்றுகடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென மூன்று பெண்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

நீரில் அடித்துச்செல்லப்பட்ட மூவரில் இரு பெண்கள் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மற்றைய யுவதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவத்தில்  உடையார்கட்டு இருட்டுமடு கிராமத்தை சேர்ந்த சிவகுமார் விதுஷிகா 20 வயதுடைய இரு யுவதிகள் உயிரிழந்துள்ளனர். மற்றைய இன்னுமொரு பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Latest news

Related news