சுகாதார சீர்கேடு காரணமாக மூடப்பட்ட உணவகம். சுகாதார முறைப்படி திறந்து வைப்பு.

ஒட்டுசுட்டான் பகுதியில் சுகாதார பரிசோதகர்கள் (29.03.2025) அன்று நடாத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவு பொருட்கள் அழிக்கப்பட்டு மூடப்பட்ட உணவகம் இன்றையதினம் (03.04.2025) சுகாதார பரிசோதகரின் ஆலோசனைக்கு அமைவாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள உணவகங்களில் ஒட்டுசுட்டான் சுகாதார பரிசோதகர்களான லோஜிதன், டிலக்சன், நதிருசன் ஆகிய பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இணைந்து கடந்த 29.03.2025 அன்று நடாத்திய திடீர் சோதனை நடவடிக்கையின் போது உணவு கடையொன்றிலிருந்து 10kg ரொட்டி, றோல்ஸ் போன்ற மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டு சுகாதார பரிசோதகர்களால் அழிப்பு செய்யப்பட்டிருந்தது.

அத்தோடு கடையை பூட்டி குறித்த கடையை சுகாதாரமான முறையில் இயங்க நடவடிக்கை எடுக்க அன்றிலிருந்து அவர்களுக்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைவாக குறித்த உணவகம் ஒட்டுசுட்டான் பொது சுகாதார பரிசோதகரின் ஆலோசனைக்கு அமைவாக சுகாதார பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்பட்ட நிலையில் இன்றையதினம் திறக்க அனுமதி வழங்கப்பட்டதற்கமைய திறக்கப்பட்டுள்ளது.

Latest news

Related news