உடையார்கட்டு பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீரென மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட காலாவதியான உணவு பொருட்கள் உரிமையாளரின் அனுமதியுடன் இன்றையதினம் (03.04.2025) எரித்து அழிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் வைத்திய அதிகாரி பி.சத்தியரூபன் தலைமையில்
குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த சோதனை நடவடிக்கையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ரதன், மற்றும் விசுவமடு சுகாதார பரிசோதகர் சந்திரமோகன், உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஷ், வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர் றொஜிஷ்ரன், கோம்பாவில் பொது சுகாதார பரிசோதகர் சுரேஸ் ஆனந்தன் ஆகியோரும் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.







