ஆய்வாளர் ஜெயம் ஜெகனின் புழுங்கலரிசியும் புழுக்கொடியலும் எனும் நாட்டார் இலக்கிய நூல் இன்றையதினம் (13.04.2025) புதுக்குடியிருப்பு இஷானியா கலாமன்றத்தில் வைத்து வெளியிடப்பட்டிருந்தது.

ஆய்வாளரும், முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான ஜெயம் ஜெகனின் ஆறாவது நூலான “புழுங்கலரிசியும் புழுக்கொடியலும்” எனும் நாட்டார் இலக்கிய நூல் வெளியீட்டு விழாவானது
புதுக்குடியிருப்பு இஷானியா கலாமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்றிருந்தது.

இஷானியா கலாமன்றத்தின் இயக்குநரும், நிறுவுனருமான கலாநிதி சமூக திலகம் வை.கமலராஜா தலைமையில், கவிஞர் யோ.புரட்சியின் நிகழ்ச்சி தொகுப்பில்
விருந்தினர்கள் வாண்ட் வாத்தியத்தியம் முழங்க சிறுவர்களின் நடன நிகழ்வுடன் வரவேற்று வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் பிரதம விருந்தினராக கமலராஜா வசந்தாதேவி (ஜேர்மன்), பிரபல தொழிலதிபரும் நடன ஆசிரியருமான மதனதீபன் நிரோஷா (கனடா), கலாநிதி பொ.பேரின்பநாயகம், சிறப்பு விருந்தினராக சர்வதேச சாதனையாளர் அகிலத்திருநாயகி ,மாவட்ட செயலகம் சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் இ.மதியரசி, யோகம்மா கலைக்கூட நிறுவுனர் நேசமணி குமாரு யோகேஸ்வரன் , மற்றும் கலைஞர்கள் , பொதுமக்கள், இஷானியா கலாமன்றத்தின் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான ஜெயம் ஜெகனிற்கான கௌரவமும் ,அவரின் பெற்றோருக்கான கௌரவமும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் இஷானிய கலாமன்றத்தின் இயக்குநரும், நிறுவுனருமான கலாநிதி சமூக திலகம் வை.கமலராஜாவின் படம் பொறிக்கப்பட்ட இலங்கை தபால் திணைக்களத்தால் அனுப்பி வைக்கப்பட்ட உத்தியோகபூர்வ முத்திரையும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
























