மாங்குளம் மற்றும் திருமுறிகண்டியிலும் உள்ள உணவகங்கள் மீது திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

மாங்குளம் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள ஏ9 வீதி, மாங்குளம் மற்றும் திருமுறிகண்டியில் உள்ள உணவகங்களில் திடீர் பரிசோதனை ஒன்று இன்றையதினம் (24.04.2025) இடம்பெற்றிருந்தது.

ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரிகளான Dr. பகீரதன், Dr.சஞ்சீவன் ஆகியோர்களின் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களான நதிருசன் ,லோஜிதன், டிலக்சன் ஆகியோர்களினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த பரிசோதனை நடவடிக்கையில்.
சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகங்கள் மூடப்பட்டதுடன் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுகள் அழிப்பு செய்யப்பட்டிருந்தது. 

அத்தோடு சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய சில உணவகங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டதுடன், மூடப்பட்ட உணவகங்களின் குறைபாடுகள் நிவர்த்தி செய்ய
10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாமல் போனால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







