மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு – புதுக்குடியிருப்பில் சம்பவம்

வயலில் வேலை செய்துகொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இன்றையதினம் (07.05.2025) உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தற்போது சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் இ்ன்றையதினம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கள்ளியடி வயலில் வேலை செய்துகொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த குடும்பஸ்தரின் சடலம் புதுக்குடியிருப்பு பிரதேச ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் அருமைநாயகம் யசோதரன் எனும் 42 வயது மதிக்கதக்க குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

Latest news

Related news