2025 ஆம் ஆண்டுக்கான வட மாகாண விளையாட்டு திணைக்களத்தால் நடத்தப்பட்ட யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் பெண்கள் இரு அணிகளும் 1ஆம் இடத்தை தமதாக்கி சாதனை படைத்துள்ளனர்.
கிளிநொச்சி உள்ளக அரங்கில் வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் 10.05.2025 அன்று நடத்தப்பட்ட வடக்கின் 5 மாவட்டங்களும் பங்குபற்றியதான வட மாகாண யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் வட மாகாணத்தில் 1ஆம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.
ஆண்கள் பிரிவில்
1ஆம் இடம் முல்லைத்தீவு மாவட்டம் 4தங்கம் 1 வெள்ளி 3வெண்கலம் 2ஆம் இடம் கிளிநெச்சி மாவட்டம் 2தங்கம் 1வெள்ளி 2வெண்கலம் 3ஆம் இடம் வவுனியா மாவட்டம். 1தங்கம்,4வெள்ளி,4வெண்கலம் 4ஆவது மன்னார் மாவட்டம்.1தங்கம் 1வெண்கலம்.
பெண்கள் பிரிவில் 1ஆம் இடம் முல்லைத்தீவு மாவட்டம். 5தங்கம் ,4வெள்ளி 3வெண்கலம். 2ஆம் இடம் வவுனியா மாவட்டம். 1தங்கம் 1வெள்ளி 1வெண்கலம். 3ஆம் கிளிநொச்சி மாவட்டம். 3,வெண்கலம்.
முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள், பெண் வீர வீராங்கனைக்கான யூடோ பயிற்சியினை வரலாற்று அசிரியரும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்யுத்த யூடோ பயிற்றுவிப்பாளரான P. ஜெயதர்சன் வழங்கியிருந்தார்.