தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளியவளையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி : ரவிகரன் எம்.பி பங்கேற்பு

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முள்ளியவளை மேற்கு வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில், முள்ளியவளைப் பகுதியில் இன்று (13.05.2025) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

முள்ளியவளை மேற்கு வட்டாரக்கிளையின் தலைவர் குமாரையா உதயகுமாரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார். இந்த அஞ்சலி நிகழ்வு மற்றும், கஞ்சி வழங்கும் செயற்பாட்டில் முள்ளியவளை மேற்கு வட்டாரத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றியீட்டிய இரத்தினம் ஜெகதீசன், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

Latest news

Related news