முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற மாபெரும் மரதனோட்ட போட்டி (வீடியோ தொகுப்பு)

https://www.facebook.com/share/v/1AWxkUsMNm/

முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு துறையினரின் ஒழுங்குபடுத்தலில் 2025ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்ட மட்டத்திலான மாபெரும் மரதனோட்ட போட்டி இன்றையதினம் (13.05.2025) காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

முன்னாள் தேசிய மரதனோட்ட வீரர் கந்தசாமி பத்மநாதனின் நிதி அனுசரணையோடு இன்று காலை வித்தியானந்தாகல்லூரி முன்பாக ஆண்களுக்கும், முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக பெண்களுக்கும் ஆரம்பிக்கப்பட்டு முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலயம் முன்பாக நிறைவடைந்திருந்தது.

குறித்த போட்டியில் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு வெற்றி கேடயங்களும், பணப் பரிசு, சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.அத்தோடு விஷேடமாக போட்டியை நிறைவு செய்த வீரர்களுக்கு 10000 ரூபா பணப் பரிசும் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு கோட்ட கல்வி பணிப்பாளர் திருக்குமரன் , முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அதிகாரி சுதர்சன், முல்லைத்தீவு மாவட்ட உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ரி.டிலான், மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் இ.சகீதரசீலன், முல்லைத்தீவு பிரதேச செயலக பிரிவின் இளைஞர் சேவைகள் அதிகாரி சதீஸ்குமார், குமுழமுனை மகாவித்தியாலய அதிபர் ஜெயவீரசிங்கம், முன்னாள் விளையாட்டு வீரரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான ஜோசப் யோகதாஸ், ஆசிரியர்கள், முன்னாள் தேசிய மரதனோட்ட வீரர் கந்தசாமி பத்மநாதன் (கனடா) , புலம்பெயர் உறவு கந்தசாமி நுட்பராசா மற்றும் சமூக ஆர்வலர்கள், முல்லைத்தீவு மாவட்ட இளைஞர், யுவதிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Latest news

Related news