முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கனடா தேசிய கிரிக்கெட் அணி வீரர் பத்மநாதன் அரன் சார்பாக சக்கர நாற்காலிகள்  வழங்கி வைப்பு.

வடக்கு மாகாண ஆளுநர் , மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில் கனடா தேசிய கிரிக்கெட் அணி வீரர் பத்மநாதன் அரன் சார்பாக 7 சக்கர நாற்காலிகள் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நேற்றையதினம் (16.05.2025) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட மக்களின் தேவையினை கருத்தில் கொண்டு 2018 ஆம் ஆண்டு  நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கனடா தேசிய அணிக்காக அரன் பத்மநாதன் விளையாடியதனை நினைவு கூரும் விதமாக குமுழமுனையினைப் பிறப்பிடமாக கொண்டு கனடாவில் வசித்து வரும் கந்தசாமி பத்மநாதன் அவர்கள் 7 சக்கர நாற்காலிகளை  முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வடக்கு மாகாண ஆளுனர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் முன்னிலையில்  அன்பளிப்பு செய்திருந்தார்.
குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுனர் நா.வேதநாயகம் ,மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் , வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரன, முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எம். உமாசங்கர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் நளின் பிரேமதாச , வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜெயராணி ,வைத்தியசாலை நிர்வாகிகள் மற்றும் வைத்தியசாலை சமூகத்தினர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news