வடக்கு மாகாண பாடசாலைகளுக்கான மாபெரும் அரைமரதனோட்டப் போட்டி

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான வடமாகாண ரீதியிலாக மாபெரும் அரைமரதனோட்ட போட்டியானது இம் மாதம் 6ம் திகதி முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக காலை 6 மணிக்கு மரதனோட்டத்துறைக்கு புத்துயிர் கொடுத்து வருகின்ற முன்னால் தேசிய மரதனோட்ட வீரர் கந்தசாமி பத்மநாதனின் முற்று முழுதான நிதி அனுசரணையில் தொடர்ந்து மூன்றாவது வருடமாகவும் இடம்பெறவுள்ளது.

வயதெல்லை 16 தொடக்கம் 20 வயது வரை பாடசாலை மாணவர்களுக்கானதாகும். அத்துடன் விசேடமாக மரதனோட்ட வீரர்களை வளப்படுத்தும் நோக்கோடும் சாதிக்க துடிக்கின்ற இளம் சாதனையாளர்களுக்கு சிறந்த களங்களை வழங்கும் நோக்கோடும் 14 மற்றும் 15 வயது பாடசாலை மாணவர்களுக்கான 5 கிலோமீட்டர் தூரத்தினை கொண்ட சிறிய வீதியோட்ட நிகழ்வும் அன்றைய தினத்திலே நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

போட்டியில் பங்குகொள்ள விரும்புகின்ற போட்டியாளர்கள் குறித்த நாளில் காலை 5.30 மணியளவில் மருத்துவச் சான்றிதழுடன் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பதாக வருகை தருமாறு வேண்டி கொள்ளப்படுகின்றீர்கள்.

Latest news

Related news