ஆடி அமாவாசை அன்று செய்ய கூடாதவை

முன்னோர் வழிபாட்டிற்குரிய தக்ஷிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாச, ஆடி அமாவாசை ஆகும். இந்த ஆண்டின் ஆடி அமாவாசை யூலை 24ம் தேதி வியாழக்கிழமை, நாளை வருகிறது.

 

பின்வரும் விடயங்கள் செய்யாது இருத்தல் வேண்டும்

 

 

முன்னோர் வழிபாட்டிற்குரிய தக்ஷிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாச, ஆடி அமாவாசை ஆகும். இந்த ஆண்டின் ஆடி அமாவாசை யூலை 24ம் தேதி வியாழக்கிழமை, நாளை வருகிறது.

பின்வரும் விடயங்கள் செய்யாது இருத்தல் வேண்டும்:

ஆடி அமாவாசை அன்று செய்யக்கூடாதவை

பிறரிடம் கடன் வாங்கவும் கூடாது.

மற்றவர்களுக்கு பணம் அல்லது பொருட்களை கடனாக கொடுக்கவும் கூடாது.

வாசல் மற்றும் பூஜை அறைகளில் கோலம் இடக் கூடாது. வெறும் தண்ணீரைத் தெளித்து பெருக்க வேண்டும்.

முன்னோர்களை வணங்காவிட்டாலும், எச்சில் படாமல் காகத்திற்கு உணவு வைக்க வேண்டும்.

அமாவாசை அன்று தலைமுடி, நகம் வெட்டக்கூடாது.

அசைவ உணவுகளை சமைக்கவும், உண்ணவும் கூடாது. இது ஒரு பித்ரு வழிபாட்டு நாள்.

காலை நேரத்தில் வீடு, சமையலறை அல்லது பூஜை அறையை சுத்தம் செய்யக்கூடாது.

காலை நேரத்தில் நீண்ட நேரம் தூங்கக் கூடாது.

படையலுக்கு சமைக்கப்பட்ட உணவுகள் வீட்டில் உள்ளவர்களுக்கே; வெளி நபர்களுக்கு கொடுக்கக் கூடாது.

வீட்டிற்கு வெளி நபர்களை அழைத்து உணவளிக்கக்கூடாது.

முதலில் காகத்திற்கு சாதம் வைத்து, பிறகு முன்னோர்களுக்குப் படையல் இட வேண்டும்.

படையல் போடும் போது ஒரு இலை மட்டும் போடக்கூடாது. இரு இலைகள் வைத்தே போட வேண்டும்.

பெண்கள் தலைவிரியாக, குங்குமம்/திருநீறு இல்லாமல் இருக்கக் கூடாது.

பெண்கள் குளித்து பாரம்பரிய உடையில், புடவையுடன் சமைக்கவும், விளக்கேற்றவும் வேண்டும்.

Latest news

Related news