இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்

நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது இன்றையதினம் (26.07.2025) முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.

வடகிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்த நிலையில் வடக்கு, கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் மாவட்ட செயலகம் முன்பாக இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,கரைதுறைப்பற்று பிரதேச சபை தபிசாளர் லோகேஸ்வரன் , கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஜுட்சன்,வடக்கு, கிழக்கு சமூக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்புமணி லவகுசராசா, மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest news

Related news