துணுக்காய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொதுமக்களின் பிரச்சினைகளை கிராமசேவகர் பிரிவுரீதியாகச் சென்று ஆராய்ந்து தீர்த்து வைக்கும் “மக்கள் குறைகேள் செயற்திட்டம்” இன்றையதினம் பிரதேச செயலாளர் தலைமையில் திருநகர் கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது.

மக்களை மையமாகக் கொண்ட அரச சேவை ஒன்றினை வினைத்திறனாக வழங்குவதற்கு ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அரச சேவை தொடர்பான மக்களின் அபிப்பிராயங்கள் ஆலோசனைகளை நேரடியாகக் கேட்டறிந்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக கிராமசேவகர் பிரிவுரீதியான மக்கள் குறைகேள் செயற்திட்டத்தின் சந்திப்பு திருநகர் கிராம சேவகர் பிரிவில் இன்று இடம்பெற்றது

இதில் உதவிப் பிரதேச செயலாளர், திருநகர் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக களமட்ட உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இச் சந்திப்பின் போது கலந்து கொண்ட பொதுமக்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக முறைப்பாடு பெறப்பட்டு அவற்றிற்கான தீர்வுகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

குறைகேள் நிகழ்வில் நீண்டகாலமாக காணிகளுக்கான அனுமதி பத்திரங்கள் கிடைக்கப்பேரவில்லைஎன்ர முறைப்பாடுகளும் , பாடசாலை மற்றும் பாலர் பாடசாலைகளில் உள்ள பிரச்சனைகளும் மக்களால் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் உடனடி தீர்வுகள் உடனுமே மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டதுடன் நீண்ட பிரச்சனைகளுக்கு கால அவகாசம் ஒன்று பெறப்பட்டு குறித்த பிரச்சனைகளை தீர்க்கும் முகமாக பிரதேச செயலக பகுதிக்கு வருகைதருமாரும் கூறப்பட்டது





