பல்பொருள் வணிகங்களில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள். வர்த்தக நிலையங்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை.

மாங்குளம் பொது சுகாதார பிரிவில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் மீது திடீர் பரிசோதனை பொதுசுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (06.08.2025) இடம்பெற்றுள்ளது.

ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட மாங்குளம் பொது சுகாதார பிரிவில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரிகளான வைத்தியர் பகீரதன், வைத்தியர் சஞ்சீவன் ஆகியோர்களின் வழிகாட்டலில் மாங்குளம் பொது சுகாதார பரிசோதகர் நதிருசன் தலைமையில் ஒட்டுசுட்டான் பொதுச்சுகாதார பரிசோதகர் டிலக்சன் மற்றும் முத்தையன்கட்டு பொது சுகாதார பரிசோதகர் லோஜிதன் ஆகியோர் இணைந்து மாங்குளம் பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டு அழிப்பு செய்யப்பட்டதுடன் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Latest news

Related news