புதுக்குடியிருப்பு கந்தசுவாமி ஆலயத்தில் 7 கோடி ரூபாய் செலவில் அமையப்பெறவுள்ள அன்னதானமடம் மற்றும் திருமண மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கந்தசுவாமி ஆலயத்தில், 7 கோடி ரூபாய் செலவில் அமையப்பெறவுள்ள அன்னதானமடம் மற்றும் திருமண மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்றையதினம் இடம்பெற்றிருந்தது.

கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளை தொடர்ந்து பிற்பகல் 12.30 மணியளவில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆலய வளாகத்தில் நடைபெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் ஆலய பிரதான குருக்கள், ஆலய நிர்வாகிகள், கிராம மக்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடதக்கது.

Latest news

Related news