புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் அமைந்துள்ள இனிப்பு கடை ஒன்றில் இன்று (22) இரவு 7 மணியளவில் பணம் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கடையில் பணம் திருட்டில் ஈடுபட்டதனை உரிமையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தவுடன், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இணைந்து குறித்த இளைஞனை மடக்கிப் பிடித்து புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்டவர் பரந்தன் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
