தியாக தீபம் திலீபனின் 38ம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றையதினம் காலை புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38ம் ஆண்டு நினைவு நாளானது இன்றையதினம் (26.09.2025) புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இடம்பெற்றிருந்தது.
புதுக்குடியிருப்பு வர்த்த சங்க தலைவர் நவநீதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில், புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள் தங்களது கடைகளை மூடி தீயாக தீபம் திலீபனுக்கான அஞ்சலி செலுத்தியிருந்தார். பொதுச்சுடரினை சட்டத்தரணி தனஞ்சயன் ஏற்றிவைக்க அதனை தொடர்ந்து தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுரையுடன் அஞ்சலி நிகழ்வு நிறைவடைந்திருந்தது.