முல்லைத்தீவு – வற்றாப்பளையில் தியாக தீபம் திலீபனின் 38ம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் (26) இடம்பெற்றிருந்தது.

சமூக செயற்பாட்டாளரும், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினருமான ஞா.யூட்சன் தலைமையில் வற்றாப்பளையில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் நிகழ்வு இடம்பெற்றது. நினைவு சுடர் ஏற்றத்தின் பின்னர் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், பொது அமைப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.









