புதுக்குடியிருப்பு பொது நூலகம் நடத்திய திறந்த பிரிவு நாடக போட்டியில் ஜெயம் ஜெகனின் நாடகங்கள் முதல் மூன்று இடங்களை தட்டி சென்றன.

Lபுதுக்குடியிருப்புப் பிரதேச சபைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பொது நூலகத்தினால் நடத்தப்பட்ட திறந்த பிரிவுக்கான நாடகப் போட்டியில் நெறியாளர் ஜெயம் ஜெகனின் மூன்று நாடகங்கள் முதல் மூன்று இடங்களை பெற்றுக் கொண்டன.

எழுத்துரு, பாடல் வரிகள் இசையமைப்பு, நெறியாள்கை ஆகியவற்றை ஜெயம் ஜெகன் மேற்கொண்டார். இவரது புத்தகம் எனும் நாடகம் முதலாம் இடத்தையும் ,

வாசிப்பை சுவாசிப்பாக கொண்டவர்கள் என்னும் நாடகம் இரண்டாம் இடத்தையும் , அறிவின் வாசல் எனும் நாடகம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.

ஜெயம் நாடகக் கல்லூரியின் கலைஞர்களினால் ஆற்றுகை செய்யப்பட்ட இந்நாடகம் மாணவர்கள் மற்றும் சமூகத்தில் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் முகமாக இம்மூன்று நாடகங்களும் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு நடிக்கப்பட்டு நெறியாள்கை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் புதுக்குடியிருப்புப் பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு வழங்குகின்ற நிகழ்வு நேற்றையதினம் மு /பண்டாரவன்னியன் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

Latest news

Related news