பிரித்தானியா சென்றுள்ள தமிழகத்தின் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அங்குள்ள ஈழத்தமிழர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
குறித்த நிகழ்வானது, பிரித்தானியாவில் உள்ள nakshatra hall, snakey lane, feltham tw13 7na எனும் இடத்தில் எதிர்வரும் 23ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.
முற்பதிவு செய்பவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படவுள்ளதால் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளவர்கள் MeetAnnamalai.eventbrite.com இந்த இணைப்பின் மூலம் முற்பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை – இந்திய விவகாரம்
இலங்கை – இந்திய விவகாரத்தில் இரு தரப்பு உறவுகளையும் மேம்படுத்தவும் குறிப்பாக தமிழர் வாழ் பிரதேசங்களான வடக்கு – கிழக்கு பகுதிகளில் அதீத ஆர்வம் காட்டி வரும் அண்ணாமலையின் பிரித்தானிய பயணமும், அங்கு ஈழத்தமிழர்களை சந்திக்கவுள்ள விடையமும் உற்றுநோக்கத்தக்கதாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது