விபத்தில் இருவர் காயம். விபத்தை ஏற்படுத்தியவரை மடக்கிப்பிடித்த இளைஞர்கள்.

வவுனியா பூந்தோட்டம் பிரதான வீதியில் இன்று (20) மாலை இடம்பெற்ற விபத்தில் கணவன், மனைவி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா நகரில் இருந்து பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள தமது வீடுநோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன் மனைவியை வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் காயமடைந்த இருவரும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தை ஏற்படுத்திய இளைஞர் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி ஓடியுள்ளார். எனினும் குறித்த பகுதியில் ஒன்று கூடிய இளைஞர்கள் அந்த நபரை நையபுடைத்ததுடன், பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
இதேவேளை விபத்தை ஏற்படுத்திய நபர் மதுபோதையில் இருந்தாரா என பொலிசார்
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை வவுனியா செட்டிகுளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்றையதினம் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news