கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா இன்றையதினம் மிகச்சிறப்பாக இடப்பெற்றுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூறாவது ஆண்டு விழாவின் முதலாம்நாள் நிகழ்வானது இன்றையதினம் (21.06.2023) காலை 10 மணியளவில் பாடசாலை வளாாகத்தில் மிக சிறப்பாக ஆரம்பமாகியிருந்தது.
குறித்த நூற்றாண்டு விழாவில்
விருந்தினர்கள் பான்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டதுடன் பிரதம விருந்தினரால் நுளைவாயில் பெயர்ப் பலகை திரை நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து நாடா வெட்டி திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. அதனை தாெடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை, பண்டாரவன்னியன் சிலை, அப்துல்கலாம் சிலை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டிருந்தது.
பாடசாலையின் அதிபர் குலேந்திரகுமார் தலைமையில் ஆரம்பமான குறித்த விழாவில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுனர் P.S.M சாள்ஸ் ,
கௌரவ விருந்தினர்களாக வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் லெனின் அறிவழகன்,
பழைய மாணவன் இராசரத்தினம்- அவுஸ்ரேலியா, மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் ந.ஞானசுந்தரம் , பழைய மாணவர் சங்கம் லண்டன் கிளை சி.தவமோகன் , பழைய மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் , நலன்விரும்பிகள் என பலரும் கலந்து காெண்டு சிறப்பித்திருந்தனர்.
குறித்த நிகழ்வில் க.பொ.த சா/த பரீட்சையில் 9ஏ பெற்ற மாணவர்கள், 2021 இல் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள், 2021ல் பல்கலைக்கழகம் சென்ற மாணவர்கள், 2022 இல் எறிபந்தில் தேசியம் சென்ற அணி போன்ற மாணவர்களுக்கு கௌரவிப்பும் அதனை தாெடர்ந்து மரதன் , கரப்பந்து, வடககு வலய ஆசிரியர்களுக்கிடையிலான துடுப்பாட்டம், மாணவர்களுக்கான துடுப்பாட்டம், வலைப்பந்து, கழகங்களுக்கிடையிலான துடுப்பாட்டத்தில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றிருந்தது.
குறித்த நூற்றாண்டு விழாவானது இரண்டு நாட்கள் 4 அமர்வுகளாக நிகழ்வுகள் இடம்பெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.