இலங்கையிலிருந்து மீண்டும் தாய்லந்துக்கு கொண்டு செல்லப்பட்ட ‘முத்துராஜா’ என்ற சக் சுரின் யானைக்கு சிகிச்சையளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசேட ரஷ்ய விமானத்தின் ஊடாக குறித்த யானை நேற்றைய தினம் அதன் தாய் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதேவேளை, பரிசோதனைகளுக்கு தேவையான இரத்த மாதிரிகள் சக் சுரின் யானையிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாக தாய்லாந்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சக் சுரின் யானையின் காலில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.