பொதுநலவாய பளு தூக்கல் போட்டிக்கு வடமாகாணத்திலிருந்து முதன்முறையாக சென்ற மாணவி

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டிக்கு முதல் முறையாக வவுனியா மண்ணில் இருந்து மாணவி ஒருவர் தெரிவாகியுள்ளார்.

2023ம் ஆண்டிற்கான அகில உலக பளு தூக்கல் போட்டிக்காக இலங்கையின் வடமாகாணம் வவுனியாவிலிருந்து 40கிலோ எடை பிரிவில் 16 வயதையொட்டிய வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி கோசியா திருமேனன் தெரிவாகி இன்று தொடக்கம் 16 ஆம் திகதிவரை டெல்லியில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்க சென்றுள்ளார்.

இவர் வெற்றி பெற்று வடக்கு மாகணத்திற்கு பெருமை சேர்ப்பார் என எதிர்பார்பதோடு ஞானஜீவன் ஆசிரியரின் நெறிப்படுத்தலில் போட்டிக்கு சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news