தேசிய கராத்தே சம்மேளனத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான மாவட்ட ரீதியிலான தெரிவு போட்டி கிளிநொச்சி உள்ளக விளையாட்டரங்கில் 22, 23ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது.
இதில் 22 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் நிப்பான் கராத்தே சங்கம் 8 தங்கப் பதக்கங்கள் 2 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 1 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளது.
நேற்று (23) நடைபெற்ற போட்டியில் நிப்பான் கராத்தே சங்கம் 4 தங்கப் பதக்கங்கள் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளது.
வவுனியா மாவட்ட ரீதியில் 12 தங்க பதக்கங்களையும் ,2 வெள்ளிப் பதக்கங்களையும், 5 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று கொண்டுள்ளது.
வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு ஞா.ஞானகீதன் ஆசிரியர் பயிற்றுவித்திருந்தார்.