சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அழைத்து வந்த இளைஞன் கைது. 

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை அழைத்துவந்த கள்ளப்பாட்டு இளைஞனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

விசுவமடுவினை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என கடந்த மாதம் பெற்றோரால் விசுவமடு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் வைத்து கள்ளப்பாட்டினை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனையும் குறித்த சிறுமியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன். குறித்த இளைஞரை தடுப்பு காவலில் வைத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மாதம் குறித்த இளைஞன் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அழைத்து வந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news