முல்லைத்தீவு – வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14 அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53மாணவியர்களுக்கும், நான்கு பணியாளர்களுக்கும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது அஞ்சலிகளைச் செலுத்தினார்.
குறித்த படுகொலை இடம்பெற்ற செஞ்சோலை வளாகத்தில், சுடரேற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில் சமூக ஆர்வலர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் இ. ஜெகதீசன் உள்ளிட்ட சமூகசெயற்பாட்டாளர்கள் சிலரும் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.