முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் பயணம் செய்பவர்கள் பாலத்திற்கு அருகாமை வீதி சமிக்ஞை இல்லாததால் போக்குவரத்தில் பெரும் சிரமத்தினை எதிர் கொள்கின்றார்கள்.
பரந்தன் _ முல்லைத்தீவு செல்லும் வீதியில் வட்டுவாகலில் அமைந்துள்ள பாலத்தில் வீதி சமிக்ஞை இல்லாததனால் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
குறித்த வீதியில் அமைந்துள்ள பாலத்தில் போக்குவரத்தில்பெரிய வாகனம் ஒன்றே பயணம் செய்ய முடியும். ஏனைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு குறித்த வாகனம் வீதியை கடந்ததன் பிற்பாடே பயணம் செய்ய முடியும். அவ்வாறு வாகனம் வருவதனை அவதானிக்காது சென்றால் மீண்டும் ஒரு வாகனம் பின்னோக்கி சென்றதன் பின்னரே பயணிக்க முடியும். இவ்வாறாகவே குறித்த பாலத்தில் பயணம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலையுள்ளது.
ஆகவே இவ் பாலத்தில் வீதியின் இரு பக்கங்களிலும் சமிக்ஞை விளக்குகள் அமைக்காததனால் வாகன சாரதிகள் பெரும் இடர்களை எதிர்கொள்வதாகவும் குறித்த பாலத்தின் இரு பகுதிகளிலும் வீதி சமிக்ஞைகளை அமைத்து தருமாறும் கோரியுள்ளனர்.
குறித்த பாலமானது இதுவரை எந்தவித புனரமைப்புக்களுமின்றி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.