இலவச யூரியா பசளை வழங்கும் திட்டம் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரால் வழங்கி வைப்பு.

ஜப்பான் நாட்டின் உதவியின் கீழ் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் மூலம் (FAO) பெரும்போக நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகளுக்கான இலவச யூரியா பசளை வழங்கும் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு உட்பட்ட சுமார் 1500 விவசாயிகளுக்கான யூரியா பசளை வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக சுமார் 180 பயனாளிகளுக்கு கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தானால் இன்று (16) வழங்கி வைக்கப்பட்டது.

1.25 ஏக்கர் நிலப்பரப்புக்கு குறைவாக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயி ஒருவருக்கு 25Kg யூரியா பசளையும் அதற்கு மேல் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயி ஒருவருக்கு 50Kg யூரியாவும் வழங்கி வைக்கப்பட்டது.

கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் பரணிதரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Latest news

Related news