நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்த முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர 22.08.2023 ஆம் திகதி அன்று முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும், நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையிலும் பாராளுமன்றில் ஆற்றிய உரையை கண்டித்தும், எதிர்ப்புத் தெரிவித்தும் கண்டன போராட்டம் ஒன்றினை நாளை 25.08.2023 (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்த இன்றையதினம் (24.08.2023) முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்க கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஏனைய கிளைச்சங்கங்களும் தத்தமது நீதிமன்றங்களில் குறித்த அடையாள கண்டனப் போராட்டத்தினை மேற்கொள்ளுமாறு நட்புரிமையுடன் கேட்டு கொள்வதாக முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.