பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டன போராட்டம் ஒன்று சட்டத்தரணிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர 22.08.2023 ஆம் திகதி அன்று முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும், நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையில் பாராளுமன்றில் ஆற்றிய உரையை கண்டித்தும், எதிர்ப்புத் தெரிவித்தும் குறித்த கண்டன போராட்டம் இன்று 25.08.2023 காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டனப் போராட்டமானது இடம்பெற்றிருந்தது.
குறித்த போராட்டத்தில் கௌரவ நீதிபதிகளின் கடமையில் தலையிடாதே, சுயாதீனமான நீதித்துறையின் செயற்பாட்டை உறுதி செய்யுங்கள், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தாதே, பாராளுமன்ற சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்யாதே , கௌரவ நீதிபதிகளின் கட்டளைகளுக்கு மதிப்பளி போன்ற பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.