வவுனியாவில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து உயிரிழந்த இரண்டு வயது பெண் குழந்தையின் இறுதிக்கிரியை பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டது.
வவுனியா நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டு வயது பெண்குழந்தை ஒன்று மரணமடைந்தது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…
நேற்று (26.08.2023) மாலை வீட்டுமுற்றத்தில் குறித்த சிறுமி விளையாடிக்கொண்டிருந்தார். எனினும் சிறிது நேரத்தில் குழந்தையை காணாதநிலையில் பெற்றோர் அவரைத் தேடியுள்ளனர்.
இதன்போது குறித்த குழந்தை கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் வீழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டது.
உடனடியாக மீட்கப்பட்ட சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் ஏற்கனவே மரணமடைந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் நெளுக்குளம் பகுதியை சேர்ந்த லிங்கராயா திவிக்கா என்ற இரண்டு வயதான குழந்தையே மரணமடைந்தது. சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.