1984ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்தியா அணி கிண்ணத்தை கைப்பற்றியது.
16ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை நேபால் அணி எதிர்கொள்ளவுள்ளது.
குறித்த போட்டியானது பாகிஸ்தானில் உள்ள முல்தான் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (Multan International Cricket Stadium) இலங்கை நேரப்படி நண்பகல் மூன்று மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
13 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இந்தியா , இலங்கை, பாகிஸ்தான், நேபால், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய ஆறு நாடுகளின் அணிகள் பங்குபற்றவுள்ளன.
ஆசிய கிண்ண தொடரின் முதலாவது போட்டி 1984ம் ஆண்டு டுபாயின் ஷார்ஜாவில் நடைபெற்றது.
இந்த போட்டியில் சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar) தலைமையிலான இந்தியா அணி கிண்ணத்தை கைப்பற்றியது.
இதுவரை நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர்களில் இந்தியா அணி ஏழு முறையும் இலங்கை அணி ஆறு முறையும் பாகிஸ்தான் அணி இரண்டு முறையும் கைபற்றியுள்ளன.
இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் தசுன் சானக்க தலைமையிலான இலங்கை அணி பாகிஸ்தான் அணியை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது.