சிறுவர்களுக்கு இடம்பெறும் துன்புறுத்தல்களை இல்லாமல் செய்ய கோரி விழிப்புணர்வு பேரணி.

சிறுவர்களுக்கு எதிரான சரீர தண்டனையினை நிறுத்துவதுடன் வலைத்தள துன்புறுத்தல்களையும் இல்லாமல் செய்யும் சமூக விழிப்புணர்வு பிரச்சார கவனயீர்ப்பு பேரணி ஒன்று புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றிருந்தது.

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இன்று (4) காலை 10.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு பேரணியானது பிரதேச செயலகத்தில் நிறைவுற்றிருந்தது. child fund நிதி அனுசரணையில் Au lanka நிறுவனமானது புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து விழிப்புணர்வு பேரணியினை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த பேரணியில் இன்றைய வித்தே நாளைய விருட்சம், சிறுவர்கள் எங்கள் வீட்டு பிள்ளைகள் அவர்களை பாதுகாப்பது பெற்றோரின் கடமை, சிறுவர் உரிமை சட்டத்தை மதியுங்கள், அப்பா, அம்மா, அக்கா, அண்ணாஎமது பாதுகாப்பு உங்கள் பொறுப்பு, சிறுவர்களை சங்கடமான சூழ்நிலையில் இருந்து பாதுகாப்பாக வாழ வழி செய்வோம் போன்ற பல்வேறு வாசகங்களையுடைய பதாதைகளை தாங்கியவாறு பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.

பேரணியின் நிறைவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் விழிப்புணர்வு கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. இதில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் , முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ, Au Lanka நிறுவனத்தின் செயற்திட்ட உத்தியோகத்தர் பி.நந்தகுமார், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest news

Related news