தவறான முடிவால் பறிபோன இரு உயிர்கள்!

கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய பரந்தன்12 ஏக்கர் பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் கடிதம் ஒன்றை எழுதிவைத்து விட்டு தவறான முடிவால் உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு சிறுமிகளும் தம்மால் இந்த பூமியில் வாழ முடியாது என தெரிவித்து தமது இறப்புக்கு காரணம் தாங்களே என கடிதம் ஒன்றை எழுதி அதில் இருவரும் கையொப்பம் இட்ட நிலையில் குறித்த கடிதம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

இரண்டு சிறுமிகளும் தற்பொழுது க.பொ.த சாதாரணப் பரீச்சைக்கு தோற்றி பெறுபேறுக்காக காத்திருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது

Latest news

Related news