மறைந்த ஊடகவியலாளர் நிபோஜனின் குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவி வழங்கி வைப்பு (Video).

பெண் தலைமை தாங்கும் குடும்பமான மறைந்த ஊடகவியலாளர் நிபோஜனின் குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த மறைந்த ஊடகவியலாளர் நிபோஜனின் குடும்பத்தினருக்கு கனடா செந்தில் குமரனின் நிவாரண அமைப்பின் ஏற்பாட்டில் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான தையல் பொருட்கள் திருகோணமலையில் அவரது மனைவி இல்லத்தில் வைத்து இன்றையதினம் (04.12.2023) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்கால பொருளாதார நெருக்கடி காலத்தில் தலைமைதாங்கும் குடும்பங்கள் வாழ்வாதாரத்தினை கொண்டு நடாத்த பெரிதும் சிரமத்தினை எதிர்கொள்ளும் நிலையில் அண்மையில் புகையிரத விபத்தில் சிக்கி மறைந்த இளம் ஊடகவியலாளர் குடும்பத்திற்கு தேவையறிந்து தக்க சமயத்தில் குறித்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news