வவுனியா பிரதேச செயலக கலாசார விழா வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டபத்தில் மிக சிறப்பாக நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா பிரதேச செயலகமும், வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், வவுனியா பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த வவுனியா பிரதேச கலாசார பெருவிழா நேற்றையதினம் (14.12.2023) மிகவும் சிறப்பான முறையில் அரங்கு 1,2 என இரு பகுதிகளாக இடம்பெற்றுள்ளது.
நேற்றையதினம் காலை 9.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட பிரதேச கலாசார விழாவின் முதலாவது அரங்கானது மங்கல விளக்கு ஏற்றலோடு ஆரம்பித்து தமிழ்தாய் வாழ்த்து,வரவேற்பு உரை, கவியரங்கம், பரிசளிப்பு , நாடகப்பாடல் என பல நிகழ்சிகள் இடம்பெற்று மாலை 1 மணியளவில் நிறைவடைந்தது.
பிரதேச கலாசார விழாவின் இரண்டாவது அரங்கானது மீண்டும் மாலை 1.45 மணியளவில் மங்கல விளங்கேற்றலுடன் ஆரம்பித்து தமிழ்தாய் வாழ்த்து, வரவேற்பு நடனம், அரங்கதிறப்புரை, தலைமை உரை, கொற்றவை நடனம் ,வவுனியம் 7 நூல் வெளியீடு, கலாநேத்ரா விருது வழங்கல், கிராமிய நடனம், பிரதம விருந்தினர் உரை, தமிழ் மறவர்கள் நடனம் என பல கலைநிகழ்வுகளும் இடம்பெற்று மாலை 6.30 மணியளவில் நிறைவுற்றிருந்தது.
இந்நிகழ்வில் அரங்கம் ஒன்றில் பிரதம விருந்தினராக கலாபூசணம் தமிழ்மணி முனைவர் மேழிக்குமரன் , அரங்கம் இரண்டில் ஓய்வு பெற்ற இலங்கை நிர்வாக உத்தியோகத்தர் கலாபூசணம் கந்தையா ஐயம்பிள்ளை, சிறப்பு விருந்தினராக அரங்கம் ஒன்றில் வவுனியா தேசிய கல்வியற்கல்லூரி ஓய்வு நிலை பீடாதிபதி க.பேர்ணாட், அரங்கம் இரண்டில் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டாட்டலுவல்கள் பிரதிப்பணிப்பாளர் லாகினி நிருபராஜ், மற்றும் , உதவி மாவட்ட செயலாளர் ,உதவி பிரதேச செயலாளர், கலாசார பேரவை குழுவினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியல் கல்லூரி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் ,ஊடகவியலாளர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வின் அரங்கிற்கு மறைந்த சிரேஸ்ட ஊடகவியலாளளர் பொன்னையா மாணிக்கவாசகம் என பெயர் சூட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.