கொழும்பில் அகற்றப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கள்

கொழும்பு நகரில் உள்ள ஆறு அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட எட்டு கட்டிடங்கள் அபாயகரமான சூழ்நிலை காரணமாக சீர்செய்ய அல்லது அகற்றுவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரம் தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்து அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 08 கட்டிடங்கள் அபாய நிலையில் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய,கெத்தாராம பாரோன் ஜயதிலக்க கல்லூரி கட்டிடம், ஜும்மா மஸ்ஜித் வீதி வீடுகள், திம்பிரிகசாய அபயாராம மூன்று மாடி வீடுகள் உட்பட 06 அடுக்குமாடி குடியிருப்புகள் அடங்குகின்றன.
மேலும் கொழும்பு நகரில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பிரச்சினைக்கு, முக்கிய காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ள வீடுகளை அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Latest news

Related news