தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அணிசேரா மாநாட்டுக்காக உகண்டா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் கடந்த 21ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.

 

 

Latest news

Related news