சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்திற்கு  பொலிசாரால் இடையூறு!  பல்கலைக்கழக மாணவர்கள்   5 பேர் கைது!

5 பேர் கைது – கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரகையும் பயன்படுத்தப்பட்டதுடன், சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் பொலிசாரால் தடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் நீண்ட பேச்சுவார்த்தையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் 11.30 மணியளவில் இரணைம சந்தியில் ஆம்பமானது. குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 200 மீட்டர் தொலைவில் பொலிஸார் தடுப்பரண்களை அமைத்துள்ளனர்.

குறித்த இடத்திற்கு  வருகை தந்த போரட்டக்காரர்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பொலிசாருக்கும் போராட்டக்காரருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

குறித்த வீதியால் பயணித்த நோயாளர் காவு வண்டிக்கு இடம் விடுமாறு பொலிசார் குறிப்பிட்டனர். குறித்த சந்தர்ப்பத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இதன் போது நோயாளர் காவுவண்டிக்கு இடமளிக்கப்பட்ட சமநேரத்தில் தடுப்பரண்களை தூக்கி எறிந்து போராட்டத்தை தொடர முற்பட்ட போது, பொலிசார் தடுக்க முற்பட்டனர். இதன்போது நீர்த்தாரகை மேற்கொள்ளப்பட்டதுடன், கண்ணீர் புகைக்குண்டும் போராட்டக்காரரை நோக்கி வீசப்பட்டது. தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

இதன் போது 8 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குறித்த கைதினை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

தொடர்ந்து கைதான மாணவர்களை விடுவிக்க கோரி A9 வீதியை மறித்து தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பொலிசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

நீண்ட நேர பேச்சுவார்த்தையின் பின்னர் கைதான மாணவர்களை விடுவிப்பதாகவும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் எனவும் பொலிசார் தெரிவித்தனர். அத்துடன், கைதானவர்களை விடுவிக்க பொலிஸ் நிலையத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸ் நிலையத்திற்கு பொலிசார் அழைத்தனர்.

அதன் பின்னர் கைதான மாணவர்கள் விசாரணைகளின் பின்னர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதுடன், விடுதலை செய்யப்படும் வரை தொடர்ந்தும் போராட்டம் தொடர்கிறது

Latest news

Related news