அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கெப் ரக வாகனமொன்று வீதியில் சென்ற பாதசாரிகள் குழு மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்தில் மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பெண்கள் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிலர் மீதே கெப் ரக வாகனம் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தின் பின்னர் கெப் ரக வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.