17 வயது சிறுமி சடலமாக மீட்பு

எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாணயக்கார மாவத்தை பகுதியில் உள்ள தேயிலை தோட்டமொன்றில் இருந்து 17 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் தல்கஹவத்த , கரந்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய ஹன்சிகா நதிஷானி என்ற சிறுமியாவார்.

இவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நேற்று (8) முச்சக்கரவண்டியில் சென்ற சிலர் குறித்த சிறுமியை கரந்தெனிய, தல்கஹாவத்த பிரதேசத்தில் வைத்து பலாத்காரமாக அழைத்துச் சென்றதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் இது தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

Related news